இந்த தலைப்பே ஒரு அருமையான தலைப்பு, ஏனென்றால் வாழ்க்கை என்ன என்று தெரிவதற்கு முன்பே வாழ்க்கை முடிந்து விடுகிறது.
ஒரு ஆங்கில எழுத்தாளர் சொல்கிறார் வாழ்க்கை என்பது ஒன்றுமே இல்லை ,(life is nothing)இதை நான் படிக்கும்போது இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறது யோசித்தேன், ஒண்றுமே இல்லத வழ்கைக்காகவா இவ்வளவு கஷ்டம் என்று,
பின்புதான் யோசனை வந்தது நாம் வாழ்க்கை முழுவது எதையோ ஒன்றை தேடிக்கொண்டே இருக்கேறோம்.
ஒரு ஆங்கில எழுத்தாளர் சொல்கிறார் வாழ்க்கை என்பது ஒன்றுமே இல்லை ,(life is nothing)இதை நான் படிக்கும்போது இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறது யோசித்தேன், ஒண்றுமே இல்லத வழ்கைக்காகவா இவ்வளவு கஷ்டம் என்று,
பின்புதான் யோசனை வந்தது நாம் வாழ்க்கை முழுவது எதையோ ஒன்றை தேடிக்கொண்டே இருக்கேறோம்.
சிலர் பணத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்,
சிலர் பாசத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்,
சிலர் காதலை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்,
சிலர் வேலையை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்,
சிலர் விடுதலையை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்,
சிலர் வெற்றியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்,
இன்னும் சிலர் புகழை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்,
உண்மையில் இது அத்தனையும் என்ன என்று சற்று யோசித்து பார்த்தல் அனைவரும் தேடுவது ஒன்றுதான் சந்தோசம்தான். மனிதன் உண்மையில் இந்த உலகத்தில் சந்தோசத்தை தேடுகின்றான் , சிலர் மற்றவரைப்போல் வாழ முயற்சிக்கிறான் அதுவும் எதற்கு என்றால் அவர் சந்தோசமாக இருக்கிறார், அவரை போல் நானும் சந்தோசமாக இருக்கவேண்டும் என்பதர்காகத்தானே, எனவே ஒரு மனிதன் வாழ்க்கை முழுவதும் சந்தோசத்தை தேடிக்கொண்டே தானிருக்கிறான் யாரும் அதை அடைந்ததாக தெரியவில்லை, கிடைத்திருந்தல்தான் தேடுவதை நிருத்தி இருப்பார்களே,
ஆதி மனிதன் முதலில் நெருப்பை கண்டுபித்தது முதல் இன்று மனிதர்கள் எத்தனையோ அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்துவிட்டார்கள். இது அத்தனையும் எதற்காக? மனிதன் தான் சந்தோசமாக இருப்பதர்காகத்தானே, சிலர் இந்த கண்டுபிடிப்புக்காக உயிரையும் கொடுத்திருக்கிறார்கள்.
சில தலைவர்கள் நினைத்தார்கள் நாம் வெள்ளையர்களிடம் அடிமையாக இருப்பதனால்தான் சந்தோசமாக இல்லை என்று , சுதந்திரம் வாங்கியப்பிறகாவது சந்தோசமாக இருக்கிறார்களா என்றால் அதற்க்குபிறகும் இன்னும் பல போராட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது .
இன்னும் பலர் மருத்துவமணைகளை கட்டி நோய்களை குணமாக்கினால் சந்தோசம் வரும் என்று அதையும் செய்துதான் பார்த்தார்கள் அப்படியாவது நிம்மதி கிடைத்ததா என்றால் அதுவும் கிடைத்ததாக தெரியவில்லை .
இன்னும் சற்று சிந்தித்து பார்த்தால் நாம் எதை கண்டுபிடித்தாலும் அதிலும் நிம்மதி கிடைக்கவில்லை, சரி எத்தனையோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்திருகிறோம் அதை வைத்து நம் உடலையாவது நோயில்லாமல் வைத்திருக்க முடிகிறதா என்றால் அதுவும் நம்மால் முடியவில்லை.
நம் உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டது நாமும் பல லட்சம் கண்டுபிடிப்புகளையும் கண்டு பிடித்துவிட்டோம் இன்னும் மனிதன் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறான் என்றாள் நாம் துவரை சந்தோசத்தை தேடிக்கொண்டுதான் இருக்கிறோம், அனால் இன்னும் கண்டுபிக்கவில்லை என்று தானே அர்த்தம்.
இதிலிருந்து ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும்
பல லட்சம் ஆண்டுகள், பலலட்சம் மனிதர்கள், பல லட்சம் கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்தும் இன்னும் சந்தோசத்தை தேடிக்கொண்டுத்தான்இருக்கிறோம் என்றால் நாம் தவறான பாதையிலே பயணிக்கிறோம் என்று தானே அர்த்தம்.
என் கேள்வி என்னெவென்றால் ஆதி மனிதனும் சந்தோசத்தை தேடினான். நாமும் இப்போது சந்தோசத்தை தேடுக்கொண்டிருக்கிறோம், என்றால் அவனுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்? இதில் நாம் அதை கண்ணு பிடித்துவிட்டோம் இதை கண்டுபிடித்துவிட்டோம் என்று எல்லாம் கூறிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது சற்று யோசித்து யோசித்துபாருங்கள் .
நாமும் இதுவரை சந்தோசத்தை தேடித்தேடி தவறான பாதையில் அலைந்தது போதும். பல லட்சம் ஆண்டுகளாக இந்த பாதையில் சந்தோஷம் கிடைக்கவில்லை, என்று இப்போது தெரிந்து விட்டது,
நாம் வாழ்க்கை முழுவதும் எதையோ தேடினோம் சற்று பின்னோக்கி திரும்பிபாருங்கள், நாம் இறந்த காலத்தை நினைத்தோ அல்லது எதிர்காலத்தை நினைத்தோ நாம் வாழ்ந்துகொண்டிருந்தோமே தவிர நிகழ்காலத்தில் வாழ்ந்ததில்லை,
நான் எல்லோரிடமும் ஒன்றை சொல்வேன் முடிந்ததை நினைத்து பார்த்து வருத்தப்படுவது என்பது எடுத்த வாந்தியை மீண்டும் தின்பதற்கு சமம், இதை கேட்கவே இவ்வளவு அசிங்கமாக இருக்ககிறதே இதை தானே நாம் செய்துகொண்டு இருக்கிறோம்,
எதிர் காலம் என்று ஒன்று வரப்போவதே கிடையாது எனவே இந்த நிமிடம் மட்டும்தான் உண்மை .
நம் வாழ்கையை யாரோ ஒருவர் வாழமுடியாது நாம் தான் வாழ முடியும் எனவே நான் இன்று நான் கண்டிப்பாக சந்தோசமாகத்தான் யுருப்பேன் என்று முடிவு செய்யுங்கள் அது போதும்
இந்த நொடியில் வாழுங்கள்
இந்த நொடி நீங்கள் உங்களுடையது
இந்த நொடியில் நீங்கள் மகிழ்ச்சியாகயிருங்கள் ஏனேன்றால் நாளை என்பது வரபோவது இல்லை,
உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள்,
நீங்கள் இந்த நொடியை முமுமையாக அனுபவிங்கள்
இந்த நொடியில் சந்தோசமாக இருக்க முயற்சி செய்யுங்கள் .
சந்தோசம் என்பது வெளியில் இல்லை, வெளியில் இருந்திருந்தால் நாம் எப்போதே கண்டு டுபிடித்திருப்போம், அது நம் உள்ளேதான் இருக்கிறது . எனவே இனிமேலவது சந்தோசத்தை பணத்திலோ, புகழிலோ, தேடாமல் , இந்த நொடியில் வாழுங்கள் .
இந்த நொடி உங்கள் கையில் உள்ளது , இதை நீங்கள் சந்தோசமாக வாழுங்கள்,